free hit counter
Web Hit Counter
காதலே சுவாசம் ! ! !

Sunday, April 11, 2010

என் பேரழகு பெட்டகமே

சற்றே நாம் தனித்திருந்த இளமாலை நேரம்...

உன் கூர்வேல் விழியால் எனை விழுங்கியபடி கேட்கிறாய் ஒரு கேள்வி...

நான் அழகியா ?? பேரழகியா ??

நீ அழகி என்று சொன்னால் நான் குருடன்..

பிரபஞ்சத்தின் பேரழகி என்பேயானால் நான் கவிஞன் என்றேன்

புரியாமல் விழித்துப் பின் பிடுங்கித் தின்னும் வெட்கத்துடன்

பேரழகாய் முறைத்து அழகு காட்டி
நீ அணைத்துக் கொண்டதைக் கொண்டாட

மாதம் ஒரு போதுமா என் பேரழகு பெட்டகமே? ? ?

Wednesday, September 10, 2008

காதல் பறவைகள்





ஒன்றை ஒன்று பாராவிட்டால்
உயிர் கூடு துறந்து
போகுமாம்
அன்றில் பறவையின்
உயிர் பறவை..

அன்பே...

ஒவ்வொரு முறை உன்னை பார்க்க வரும் போதெல்லாம்..
ஒரு கவிதையோடு வருவேன்..
உன் கையில் கொடுத்துவிட்டு
உன் முகத்தின் மாற்றங்களை
மௌனமாக ரசிப்பேன்..

எப்போதும் என்னை ஏமாற்றா நீ
எனக்கு மட்டும் காணக் கிடைக்கும்
உன் கன்னத்து சிவப்பை அப்போதும் 
அள்ளித் தருவாய்..

தினம் என்னை பார்க்கிறாய்..
மணிக்கணக்கில் பேசுகிறாய்..
ஆனாலும் உன் கவிதைகள்
தினம் தினம் புதிதாகவே இருக்கிறதே
எப்படி? என்று பொய் சந்தேகப் பார்வை பார்ப்பாய்..

நான் புன்னகைத்தபடியே
உன் இரு விழி நதிகளில்
என் விழி ஓடையைக் கலக்க விடுவேன்..

தினம் கொடுக்கும் ஒரே விளக்கத்தை
வெவ்வேறு உவமைகளில் நான்
சொன்னாலும் அன்றுதான்
கேட்பது போல
வெட்கத்தை மட்டும் 
பரிசாகத் தருவாய்..

இன்றும் ஒரு விளக்கம்...

வழக்கம் போலே
எனக்கு உன் வெட்கம்...

நாளைக்கு...
புது உவமை..
அதே விளக்கம்
ஆனால்
என்றும் புதிதாய்
தெரியும்
உன் 
வெட்கம்...


Thursday, September 4, 2008

காதல் காற்று..






அன்பே..

நான் என்ன கேட்டாலும் தருவா யா
என்று நீ கேட்ட போதெல்லாம்
நீ கேட்கப் போவது என் காதலை 
என்று நான் அறிந்திருக்க வில்லை..

குழந்தை கையில் கொடுக்கும் பொம்மை போலே 
விளையாடிக் களைத்தாலும், வீசி எறிய மாட்டாய் என்றே
என் இதயத்தை உன் கையில் கொடுத்தேன்...

பிய்த்து கசக்கி எறிந்து விட்டாய்.. சிரித்துக்கொண்டே...

பிய்த்து நீ எறிந்தது என் இதயம் தான் என்றாலும்,
அதில் உன் விரல்கள் காயம் பட்டிருக்குமோ
என்றுதான் நான் பதைக்கிறேன்..

பொம்மை போனால் குழந்தை அழும்..
என் இதயமோ பிய்ந்தது கூட தெரியாமல்,
நீ விளையாடவில்லையே என்றுதான் அழுகின்றது...

விளக்கை அணைக்கும் வீசும் காற்று.. 
இந்த அணைப்பில் உயிர் போவதென்னவோ விளக்குக்குதான்..

என் உயிரை அணைக்கும் காதல் காற்று நீ..
இதில் என் உயிரை போகாமல் இழுத்துப் பிடிப்பது நீதான்..



நான் அணையும் விளக்காநீ அணைக்கும் காற்றா ???

 


Tuesday, September 2, 2008

உனக்காக ஒரு கவிதை..





வெளியே
 மழை மெல்லிய தூறலாய்
பூமியுடன் காதல் மொழியில் பேசி கொண்டிருந்த
ஒரு மழை மாலைப் பொழுதில்..
நீயும் நானும் கரம்கோர்த்து நடந்து சலித்த, ரசித்த 
அமுத நொடிளை எண்ணியபடியே வெறுமையான
வானத்தை வெறித்து  சாலையில் நான் மட்டும்..
என் நினைவுப் பாலைவனத்தில் சோலையாய் நீ மட்டும்...  
நம்  
என் மன வானில் நிலவாய் நீ மட்டும்..
 உறைத்திடும் தனிமை இருட்டில் நான் மட்டும்..
இறைவன் மிகக் கருணையுள்ளவன்..  நினைவில் நீ மட்டும்..
இறைவன் மிகக் கொடியவன்... நிஜத்தில் நான் மட்டும்..
எங்கோ தூரத்தில் நீ நிற்பது போலவே 
உன் வெண்ணிற தாவணி போல மெல்லிய பனிப் போர்வை...
தரையில் நடக்கும் வான் முகிலாய் நீ மட்டும்..
உன் விழி  மட்டும் காணும் புகையுருவாய் நான் மட்டும்...
நம்பிக்கை  இருந்தும் காதல் என்னை காக்கவில்லை
காத்திருந்து கண்கள் பூத்த பின்பும், உள்ளம் உடைந்த பின்பும் 
உயிர் பறவை என் உடல் கூட்டை விட்டு பறந்த பின்பும்..
என் நினைவுகள் உனக்கு மறந்த பின்பும் கூட
உன் மேல்  நான் கொண்ட என்  காதல் இன்னும் அழியவில்லை...

நம் மண்ணில் வெறுப்போர்க்கெல்லாம் காதல் விஷம்..
நம்பிக்கையுள்ளோர்க்கெல்லாம் காதல் மட்டுமே அமுதம்...

நான் காதல் அமுதம் அருந்தியவன்..
மரணம் இல்லை எனக்கு - உன் மனத்தில்...

உனக்காக ஒரு கவிதை..
அது வாழும் ஒரு யுக காலம்.....