free hit counter
Web Hit Counter
காதலே சுவாசம் ! ! !: உனக்காக ஒரு கவிதை..

Tuesday, September 2, 2008

உனக்காக ஒரு கவிதை..

வெளியே
 மழை மெல்லிய தூறலாய்
பூமியுடன் காதல் மொழியில் பேசி கொண்டிருந்த
ஒரு மழை மாலைப் பொழுதில்..
நீயும் நானும் கரம்கோர்த்து நடந்து சலித்த, ரசித்த 
அமுத நொடிளை எண்ணியபடியே வெறுமையான
வானத்தை வெறித்து  சாலையில் நான் மட்டும்..
என் நினைவுப் பாலைவனத்தில் சோலையாய் நீ மட்டும்...  
நம்  
என் மன வானில் நிலவாய் நீ மட்டும்..
 உறைத்திடும் தனிமை இருட்டில் நான் மட்டும்..
இறைவன் மிகக் கருணையுள்ளவன்..  நினைவில் நீ மட்டும்..
இறைவன் மிகக் கொடியவன்... நிஜத்தில் நான் மட்டும்..
எங்கோ தூரத்தில் நீ நிற்பது போலவே 
உன் வெண்ணிற தாவணி போல மெல்லிய பனிப் போர்வை...
தரையில் நடக்கும் வான் முகிலாய் நீ மட்டும்..
உன் விழி  மட்டும் காணும் புகையுருவாய் நான் மட்டும்...
நம்பிக்கை  இருந்தும் காதல் என்னை காக்கவில்லை
காத்திருந்து கண்கள் பூத்த பின்பும், உள்ளம் உடைந்த பின்பும் 
உயிர் பறவை என் உடல் கூட்டை விட்டு பறந்த பின்பும்..
என் நினைவுகள் உனக்கு மறந்த பின்பும் கூட
உன் மேல்  நான் கொண்ட என்  காதல் இன்னும் அழியவில்லை...

நம் மண்ணில் வெறுப்போர்க்கெல்லாம் காதல் விஷம்..
நம்பிக்கையுள்ளோர்க்கெல்லாம் காதல் மட்டுமே அமுதம்...

நான் காதல் அமுதம் அருந்தியவன்..
மரணம் இல்லை எனக்கு - உன் மனத்தில்...

உனக்காக ஒரு கவிதை..
அது வாழும் ஒரு யுக காலம்.....

1 comment:

"Its my world" said...

நம்பிக்கை இருந்தும் காதல் என்னை காக்கவில்லை
காத்திருந்து கண்கள் பூத்த பின்பும், உள்ளம் உடைந்த பின்பும்
உயிர் பறவை என் உடல் கூட்டை விட்டு பறந்த பின்பும்..
என் நினைவுகள் உனக்கு மறந்த பின்பும் கூட
உன் மேல் நான் கொண்ட என் காதல் இன்னும் அழியவில்லை...

நம் மண்ணில் வெறுப்போர்க்கெல்லாம் காதல் விஷம்..
நம்பிக்கையுள்ளோர்க்கெல்லாம் காதல் மட்டுமே அமுதம்...

நான் காதல் அமுதம் அருந்தியவன்..
மரணம் இல்லை எனக்கு - உன் மனத்தில்...

its tooooooo touchy....especially the above lines.......nice!!!!!!!