சோம்பல் முறித்தாய் நீ....
முறிந்து போனேன் நான்.....
தலை துவட்டினாய் நீ....
துவண்டு போனேன் நான்....
பார்வை வீசிப் போனாய் நீ...
வேறு எதையும் பார்க்க மறந்தேன் நான்...
வேறு எதையும் பார்க்க மறந்தேன் நான்...
புன்னகை சிந்திப் போனாய் நீ.....
பூத்துக் குலுங்கினேன் நான்...
காதல் பரிசு தந்தாய் நீ..
ஆனந்த கண்ணீரில் கரைந்தேன் நான்...
இன்னொரு தாயாய் வந்தாய் நீ..
உன் மடியில் குழந்தையானேன் நான்....
ஆனந்த கண்ணீரில் கரைந்தேன் நான்...
இன்னொரு தாயாய் வந்தாய் நீ..
உன் மடியில் குழந்தையானேன் நான்....
திருமணம் உன்னோடு என்று சத்தியம் செய்தாய் நீ...
காலமெல்லாம் உன்னோடு
என்று நிம்மதியாய் உறங்கினேன் நான்...
காதல் மறந்து எனைத் துறந்து போனாய் நீ...
கண்ணீரில் காணாமல் போனேன் நான்...
மருண்ட விழி மானே
இது மரண சாசனம் தானே....
3 comments:
Wow super kavithai..!!:)
Plz remove this "word verification"..!!
இன்னொரு தாயாய் வந்தாய் நீ..
உன் மடியில் குழந்தையானேன் நான்....
திருமணம் உன்னோடு என்று சத்தியம் செய்தாய் நீ...
காலமெல்லாம் உன்னோடு
என்று நிம்மதியாய் உறங்கினேன் நான்...
"awesome lines".......too touchy
//இன்னொரு தாயாய் வந்தாய் நீ..
உன் மடியில் குழந்தையானேன் நான்....//
பொதுவாவே மனைவியை இன்னொரு தாயாக ஆண்கள் நினைப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கேன்..
உங்கள் கவிதையும் அதை நிரூபித்து விட்டது...
//மருண்ட விழி மானே இது மரண சாசனம் தானே....//
இது மிக அருமை...
Post a Comment