free hit counter
Web Hit Counter
காதலே சுவாசம் ! ! !: காதல் காற்று..

Thursday, September 4, 2008

காதல் காற்று..






அன்பே..

நான் என்ன கேட்டாலும் தருவா யா
என்று நீ கேட்ட போதெல்லாம்
நீ கேட்கப் போவது என் காதலை 
என்று நான் அறிந்திருக்க வில்லை..

குழந்தை கையில் கொடுக்கும் பொம்மை போலே 
விளையாடிக் களைத்தாலும், வீசி எறிய மாட்டாய் என்றே
என் இதயத்தை உன் கையில் கொடுத்தேன்...

பிய்த்து கசக்கி எறிந்து விட்டாய்.. சிரித்துக்கொண்டே...

பிய்த்து நீ எறிந்தது என் இதயம் தான் என்றாலும்,
அதில் உன் விரல்கள் காயம் பட்டிருக்குமோ
என்றுதான் நான் பதைக்கிறேன்..

பொம்மை போனால் குழந்தை அழும்..
என் இதயமோ பிய்ந்தது கூட தெரியாமல்,
நீ விளையாடவில்லையே என்றுதான் அழுகின்றது...

விளக்கை அணைக்கும் வீசும் காற்று.. 
இந்த அணைப்பில் உயிர் போவதென்னவோ விளக்குக்குதான்..

என் உயிரை அணைக்கும் காதல் காற்று நீ..
இதில் என் உயிரை போகாமல் இழுத்துப் பிடிப்பது நீதான்..



நான் அணையும் விளக்காநீ அணைக்கும் காற்றா ???

 


8 comments:

"Its my world" said...

as usual u rockk!!!!!!....all ur poems hav got gud feel

நாணல் said...

//பிய்த்து நீ எறிந்தது என் இதயம் தான் என்றாலும்,
அதில் உன் விரல்கள் காயம் பட்டிருக்குமோ
என்றுதான் நான் பதைக்கிறேன்..//

அருமை இளவேனில்..
காதலோட மனசை அழகாக சொல்லும் வரிகள்...

நாணல் said...

//விளக்கை அணைக்கும் வீசும் காற்று..
இந்த அணைப்பில் உயிர் போவதென்னவோ விளக்குக்குதான்..

என் உயிரை அணைக்கும் காதல் காற்று நீ..
இதில் என் உயிரை போகாமல் இழுத்துப் பிடிப்பது நீதான்..//

எப்படி இப்படி எல்லாம் யோசிக்க றீ ங்க

YILAVEANIL said...

// naanal said...
//பிய்த்து நீ எறிந்தது என் இதயம் தான் என்றாலும்,
அதில் உன் விரல்கள் காயம் பட்டிருக்குமோ
என்றுதான் நான் பதைக்கிறேன்..//

அருமை இளவேனில்..
காதலோட மனசை அழகாக சொல்லும் வரிகள்...//

நன்றி..

சில சமயங்களில் காதல் மனது
விசித்திரமாய் யோசிக்கும்...

உன் பாத கொலுசாக நான் மாற மாட்டேனா?
என்று கேட்டு விட்டு
வேண்டாம்..
கொலுசின் மணிகள் உன் மலர் பாதத்தைக்
காயப் படுத்தி விடுமோ ??
என்றே புலம்பும்..

தனக்கு எந்த துன்பமும் பெரிதில்லை
ஆனால் அவளுக்கு ஒரு துன்பம்
கனவில் என்றாலும்
என் மனம் தாங்காது.
மீண்டும்
என் விழி உறங்காது
அவளைக் காணும் வரையில்..

YILAVEANIL said...

////விளக்கை அணைக்கும் வீசும் காற்று..
இந்த அணைப்பில் உயிர் போவதென்னவோ விளக்குக்குதான்..

என் உயிரை அணைக்கும் காதல் காற்று நீ..
இதில் என் உயிரை போகாமல் இழுத்துப் பிடிப்பது நீதான்..//

எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க//

இந்த விஷயத்தில்
நீங்கதான் குரு..

பின்ன

இதை விடவா நான் அருமையா எழுதிட்டேன் ? ? ?


//மழை பொழிந்து ஓய்ந்து
தூறுகையில் மழையில்
நனைய வேண்டுமென்பாய்

பல மணிநேரம் பேசி ஓய்ந்து
பிரிகையில் உன்னோடு
பேச வேண்டுமென்பாய்//

நாணல் said...

//சில சமயங்களில் காதல் மனது
விசித்திரமாய் யோசிக்கும்...

உன் பாத கொலுசாக நான் மாற மாட்டேனா?
என்று கேட்டு விட்டு
வேண்டாம்..
கொலுசின் மணிகள் உன் மலர் பாதத்தைக்
காயப் படுத்தி விடுமோ ??
என்றே புலம்பும்..

தனக்கு எந்த துன்பமும் பெரிதில்லை
ஆனால் அவளுக்கு ஒரு துன்பம்
கனவில் என்றாலும்
என் மனம் தாங்காது.
மீண்டும்
என் விழி உறங்காது
அவளைக் காணும் வரையில்..//

நிஜம் தான் சகோதரரே...
தன்னை விட பல மடங்கு இன்னொரு ஜீவன் மேல் நாம் வைக்கும் நேசம் தான் காதல்... :)) வெளியில் இருந்து பார்ப்பவருக்கு அது விசித்திரமாக தான் தெரியும்..
ஆனால் காதலிப்பவரைக் கேட்டால் அதில் இருக்கும் ஆனந்த தாய் சொல்வார்கள்...

நாணல் said...

//இந்த விஷயத்தில்
நீங்கதான் குரு..//

அய்யோ ரொம்ப பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க...
ஏதோ தோனிச்சி எழுதினே.. அவ்வளவு தான் ...

YILAVEANIL said...

//தன்னை விட பல மடங்கு இன்னொரு ஜீவன் மேல் நாம் வைக்கும் நேசம் தான் காதல்... :)) வெளியில் இருந்து பார்ப்பவருக்கு அது விசித்திரமாக தான் தெரியும்..
ஆனால் காதலிப்பவரைக் கேட்டால் அதில் இருக்கும் ஆனந்த தாய் சொல்வார்கள்...//


உண்மை..
இதயம் மறக்கக்கூடாத உண்மை..